விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகியதால் 13 வயது ஈழத்துச் சிறுமி ஒருவர் லண்டனில் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இதில் லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குலசிங் கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே உயிரிழந்தவர் ஆவார். ...
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது, இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித் தல் வரை தினமும் இரவு 10.00 ...
குவைத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 10 ஆக உயர்வடைந்துள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே ...
தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது நடந்துக் கொள்ளும் விதத்திற்கு அமைய ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குறைந்தது 5 அல்லது 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது ...
தம்மைத் தாக்கியதாக தெரிவித்து மூவரைப் பிடித்து இராணுவத்தினர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். உரும்பிராய்ப் பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினருக்கு நேற்று மாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய்ப் பொலிஸார் தெரி வித்தனர். இராணுவத்தினரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரத்தில் சாதித்த மாணவன் ஒருவன் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ...
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி ...
வட பகுதியில் கடந்த 20, 21ஆம் திகதிகளில் வீசிய கடும் காற்றினால், ஏகப்பட்ட சேதங்கள் நடந்தாகியுள்ளன. வீசி எறியப்பட்ட வீட்டுக் கூரைகள், முறிந்து விழுந்த மரங்கள், கொட்டி விழுந்த மாங் கனிகள் காய்கள், சரிந்து முறிந்த முருங்கைகள் என்றவாறு சேதங்கள் பலவாகின. அதிலும் வாழைச் செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட சேதம் ...
நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ...
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் பெருமளவு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கிகளும் காணப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப் ...