முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் ...
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், நாளை (04) மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்படும் என அந்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவுதி ...
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளது. அபிநவ நிவாஹல் பெரமுன தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த ...
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) ...
களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி ...
வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று (02) ஏழாவது நாளாகவும் தொடரும் நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டறிவதிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அந்நாட்டின் புதிய அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜூன் 24ஆம் ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி நகர எல்லைக்குள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததாக புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று புதன்கிழமை (1) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் 11 கடை உரிமையாளர்களுக்கு ...
அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய ...
வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுக விழா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ...