Type to search

Sports

டோனியாகவே மாறிய தினேஷ் கார்த்திக்

Share

சென்னை அணிக்கெதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்திறனை பார்த்த போது, அவரிடம் டோனியைப் பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

ஐ.பி.எல்.தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெயிக்க வேண்டிய போட்டியை சென்னை அணி, அப்படியே கொல்கத்தாவிடம் கொடுத்து விட்டது.

இதற்கு முக்கிய காரணம் ஜாத்வ்வின் மந்தமான ஆட்டம், அவர் ஏன் இன்னும் அணியில் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா, கொல்கத்தா அணியின் தலைவரான தினேஷ் கார்த்திக் டோனி போன்று செயற்பட்டார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், டோனி மற்ற அணிகளுக்கு என்ன செய்வாரோ, அதையே சென்னை அணிக்கு தினேஷ் கார்த்திக் செய்துவிட்டார் என்று புகழ்ந்துள்ளார்.

அதாவது, பேட் கம்மின்ஸை முன்கூட்டி பந்து வீச வைத்ததால் சென்னை அணி ஓட்டங்களை குவிக்கத் தடுமாறியது.

அதேபோல், சுனில் நரைன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி வோட்சன் விக்கெட்டை கைப்பற்றி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இது ஆட்டத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தினேஷ் கார்த்திக் இடத்தில் டோனியை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link