Type to search

Local News

யாழ்ப்பாணத்தை 5 வலயமாக்குக……

Share

யாழ். மாவட்டத்தை ஐந்து வலயங்களாகப் பிரித்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்தது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத் தப்பட்டபோது மக்கள் நடந்துகொண்ட விதத்தை தக்க பாடமாக எடுத்துக் கொண்டு இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறும் சைவ மகா சபை கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக சைவ மகா சபை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், யாழ்.மாவட்டத்தை வலிகா மம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் யாழ்.மாநகரம் என ஐந்து வலயங்களாகப் பிரித்து ஐந்து வலயங்களுக்கும் தனித்தனியான ஊரடங்குச் சட்டத்தை அமுல் படுத்த வேண்டும்.

இக்காலப்பகுதி யில் ஒரு பிரதேசத்திலிருந்து இன் னொரு பிரதேசத்திற்கு அத்தியா வசிய பணியாளர்களும் வைத்தி யர்களும் செல்வதற்கு என போக்கு வரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்கவேண்டும்.

யாழ். மாநகரத்திற்கு வீட்டுக்கு வீடு பொருட்களை விநியோகிக்கும் நடைமுறை யைக் கொண்டு வர லாம். ஊரடங்கு ஒரு வாரத்திற்குத் தொடரப்பட வேண்டும். ஊரடங்கு வேளையில் உரிய அனுமதிகளு டன் நகர்ப்புற களஞ்சியங்களி லிருந்து கிராமங்கள் மற்றும் பிரதேச ரீதியான கடைகளுக்குப் பொருட்கள் நகர்த்தப்பட்டு மிகக் குறைந்த எண்ணிக் கையானோரு டன் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறையைப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விரைவான முழமையான பாதுகாப்புப் பெற முடியும்.

இதைச் செயற்படுத்துமாறு அரச தரப்பையும், அதிகாரிகளையும் வலியுறுத்துகின்றோம் என சைவ மகா சபை மேலும் வலியுறுத்தியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link