Type to search

Headlines

யாழில் நால்வருக்கு கொரோனா

Share

மதபோதகர் உட்பட யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் போதகருடன் அரியாலை தேவாலயத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மத போதகருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் நேற்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்று யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் மூவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் அங்கு மாற்றப்படவுள்ளனர்.

சுவிஸர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

அவர்களில் 10 பேருக்கு பரிசோதனை நடைபெற்ற நிலையில் ஏனைய 10 பேருக்கு இன்று பரிசோதனை நடைபெறவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link