Type to search

Headlines

ஊரடங்கு நேரத்தில் பலசரக்கு கடைகளை திறக்க அனுமதி

Share

ஊரடங்கு நேரத்தில் வட மாகா ணத்தில் பலசரக்குக் கடைகளை திறக்க அனு மதி வழங்கப்பட்டுள் ளது பொது மக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கு மாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமை வாக வட மாகாண ஆளுநர் செய லகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரி கள் ஆகியோர் பங்கு பற்றி நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில ஊரடங்கு நேரத்தில் பொதுமக் களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் தொடர் பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள், உள் @ர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்குத் தேவை யான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக் கபட்டுள்ளது. இந்நோக்கத்திற்கான வாகன பயன்பாடு அனுமதிக்கப்பட மாட் டாது.

பலசரக்கு கடைகள் / அங்காடி விற்பனை நிலையங்கள் அவசிய மான ஐந்து அல்லது ஆறு பொருட் களை 500 ரூபாய் 1000 ரூபாய் பெறுமதியான பொதி களாக்கி வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யமுடியும்.

தற்போது உள்ள சூழ்நிலை யில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்திற் கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யபட்டுள்ளன.

மரக்கறி வியாபாரிகள் தாங் களாகவே உற்பத்தியாளர்களிட மிருந்து கொள்வனவு செய்து உள்@ரில் விற்பனை செய்யலாம்.

இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளார், உள்ளுராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக் களம், விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து பொருத்த மான நடைமுறைகளை ஏற்படுத் தல் வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப் பதற்கான அனுமதி வழங்கபட் டுள்ளது.
சந்தைகளில் மீன் விற்பது தடை செய்யபட்டுள்ளது மாற்று ஒழுங் காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கபட் டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள விநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

அரிசியின் சீரான விநியோ கத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள் இயங்குவதற்கு அனு மதியளிக்கபட்டுள்ளது.

வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டதிற்கு அரிசி கொண்டு வரு வதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.

வடமாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஏனைய மாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட அரசாங்க அதிபர் களுடன் கலந்துரையாடி தீர்மா னிக்கப்படுதல் வேண்டும்.

மீன்பிடி தொழிலுக்கு தேவை யான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியளிக் கபட்டுள்ளது. மருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும் வைத்திய மருத்துவ குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுட னும் சென்று மருந்துகளை பெற்று கொள்ளலாம்.

கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்ல நோயாளர்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் மாவட்டத்தில் உடனடியாக நடை முறைப்படுத்து வதுடன் ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் மாவட்ட பாதுகாப்பு படை யினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனை களை பெற்று நடைமுறை படுத்துமாறும் அரசாங்க சுற்று நிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட நடைமுறைகளுக்கு அமை வாக இந் நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் பணிப்புரை விடுக் கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link