Type to search

Headlines

சீனிக்கு பயப்படாதவர்கள் பால் குடிக்க அஞ்சுவதன் மர்மம் என்ன?

Share

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவு பால் ஆகும். சிறிய வர்கள் முதல் வயது முதிர்ந்த வர்கள் வரை அனைவருமே பால் அருந்துவது மிகவும் நல் லது. மேலைத்தேய உணவு வகைகளுடன் ஒப்பிடும் போது எமது உணவில் புரதப் பற்றாக் குறை ஒரு பெரும் பிரச்சினை யாக இருந்து வருகிறது.

இந்தப் புரதப் பற்றாக் குறையை பால் அருந்துவதன் மூலம் ஓரளவேனும் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். பெரியவர்கள் பால் அருந்துவது ஆபத்தானது என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் பலரிடையே காணப்படுகிறது. இந்தத் தவறான மனப்பதிவு காரணமாகப் பால் குடிப்பதை நிறுத்தியவர்கள் பலர்;. “நான் பயந்து பால் குடிப் பதில்லை” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் பலர்.

வீட்டிலே ஆடு, மாடுகளும் உள்ளவர்கள் கூட அந்தப் பாலை விற்று விட்டு சத்துமா என்றும் ஆடை நீக்கிய பால்மா என்றும் அதிக விலை கொடுத்து வாங்கி கரைத்துக் குடிக்கும் பரிதாப நிலை இங்கு காணப்படுகிறது.

சோடா குடிக்கப் பயப்படாதவர் கள், சிகரெட் மற்றும் குடி வகை களைக் குடிக்கப் பயப்படாதவர் கள், சீனி சாப்பிடப் பயப்படாதவர் கள், சொக்லேற், கண்டோஸ் என்பன சாப்பிடப் பயப்படாதவர் கள், உடற்பயிற்சி செய்யாமல் “சும்மா” இருக்கப் பயப்படாதவர் கள் பால் குடிக்க மட்டும் பயந்து நடுங்குவதன் மர்மம் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

பயப்பட வேண்டிய விடயங்க ளுக்கு பயம் இன்றி இருந்து கொள்வது ஆபத்தானது , அதே சமயம் பயம் கொள்ளத் தேவை யற்ற விடயங்களுக்குப் பயந்து கொண்டே இருப்பதும் ஆபத்தா னது என்றும் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பால் என்ற இயற்கையான, அற்புதமான, இந்தப் பானத்தில் தராதரம் கூடிய புரதம், போதியளவு விற்றமின்கள், கனியுப்புக்கள், மாப்பொருள், கொழுப்பு என அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்கின்றன. இதனை ஓர் அதிசிறந்த நிறை உணவு என்று சொல்லுவார்கள்.

மேலைத்தேய நாடுகளில் சொல்லப்படும் உணவுக் கட்டுப் பாட்டு முறைகள் அனைத்தும் எமது மக்களுக்குப் பொருந்தாது. எமது உணவு முறைக்குப் பழக் கப்பட்ட அனைவரும் போதுமான அளவு பால் குடிப்பது பாதுகாப் பானது மாத்திரமல்ல உடல் சுகா தாரத்திற்கு மிகவும் நல்லது.

நீரிழிவு, குருதியமுக்கம், கொலஸ் ரோல் நோய் உள்ளவர்கள் கூட பால் குடிப்பது நல்லது. ஆடை நீக்கிய பால்மா வகைகளை மட்டும் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தகரங்களிலே அடைத்து விற்ப னையாகும் சத்து மாக்களுடன் ஒப்பிடும் பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் அதிகமாக இருப்பதுடன் எந்த விதமான இர சாயனக் கலப்புமற்ற மலிவாகக் கிடைக்கக்கூடிய இயற்கையான உணவாக இது விளங்குகிறது. இருந்தும் தகரங்களிலே அடைத்து வரும் சத்துமாக்களுக்கு நாம் அடிமைப்பட்டுப் போய் இருக்கி றோம். இது ஒரு வேதனையான உண்மை.

எமது மண்ணில் உற்பத்தி யாகாத இறக்குமதி செய்து வரும் இந்தப் பொருட்கள் தான் உண் மையான சத்துள்ளவை என நம்பி பெருமளவு பணத்தை இதற்காக அநாவசியமாக செலவு செய்து கொண்டிருக்கிறோம்.

எமது சொந்த மண்ணில் உற்பத்தியாகும் ஆரோக்கியமான, இயற்கையான உணவுப் பொருட்களான ஊர்க் கோழி முட்டை, உடன் பசும் பால், மோர், விளாம்பழம், கொய்யாப் பழம், முருங்கைஇலை, வல் லாரை, தவசிமுருங்கை, அகத் திப்பூ, தேசிக்காய், ஒடியல், இரா சவள்ளி, இளநீர், இளநீரின் வழுக்கல், நுங்கு ,தீட்டாத அரிசிமா, போன்ற பல அற்புதமான உணவு வகைகளில் நாம் அக்கறை காட் டாமல் இருந்து வருகிறோம்.

இவற்றை ஒழுங்காக பாவித்து வருவோமாக இருந்தால் சத்துமாப் பேணிகளோ விற்றமின் குளி சைகளோ பாவிக்க வேண்டிய தேவை இருக்காது. அத்துடன் எமது உள்@ர் உற்பத்தி பெருகி எமது சூழல் வளம் பெறும்.

அதிகரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களுக்கு பொது வாக ஆடை நீக்கிய பால்மா வகை (Non-fat) சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வகை பால் மாவிலே பசுப்பாலுடன் ஒப்பிடு கையில் கொழுப்பின் அளவு குறைவு என்பது யாவரும் அறிந் ததே.

ஆனால் இந்த வகையான பால்மா உற்பத்தியின் பொழுது பாலுக்கு பலவகையான செயற் கையான மாற்றங்கள் செய்யப்ப டுகின்றன. அத்துடன் பல்வேறு வகையான இரசாயனப் பொருட் கள் சேர்க்கப்படுகின்றன.

இதனால் பாலின் இயற்கை யான சுவையும் குன்றிப் போகி ன்றது. அத்துடன் இதன் விலை யும் ஒப்பீட்டளவில் அதிகமாகும். ஆடை நீக்கிய பால்மா வகை களுடன் ஒப்பிடும் பொழுது பசுப் பால் இயற்கையானது. இரசா யனங்கள் எதுவும் சேர்க்கப் படாதது. சுவையானது. மலி வானது. அனைத்து வகையான இயற்கையான ஊட்டச்சத்துக் களை கொண்டது.

பசுப் பாலிலே கொழுப்பு வீதம் சற்று அதிகமாக இருந்தாலும் அது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை. கார ணம் மனிதன் உண்ணும் உண வின் கலோரி பெறுமானத்தில் 30% கொழுப்பு இருக்க வேண் டும்.

அந்தக் கொழுப்பு பால் மூலம் எமக்கு கிடைப்பது தீங்கு எத னையும் செய்து விடாது. எனவே இயற்கையான உடன் பசுப்பால் ஆடை நீங்கிய பால்மா வகை களிலும் பார்க்க சிறந்தது. அதி கரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களும் பசுப்பாலை பாதுகாப்பாக அருந்தமுடியும்.

Dr. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link