Type to search

Sports

டோனி பட்டிங்கில் ஏதோ தவறு நடக்கிறது அவரால் சரியாக ஆட முடியவில்லை

Share

ஐ.பி.எல்.தொடரில் அண்மையில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய நிலை யில் எளிதாக ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை சென்னை அணி கோட்டை விட்டது.

சி.எஸ்.கேவில் டோனி, கேதார் இருவரும் மிக மோசமாக பட்டிங் செய்து விமர்சனங் களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் தற்போது டோனியின் பட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஜாம்ப வான்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா டோனியின் பட்டிங்கை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக லாரா பேசியதாவது,
டோனியின் பினிஷிங் ஆட்டங்கள் இப்போதெல்லாம் கேள்வி எழுப்புகிறது. அவர் தனக்கு விருப்பப்பட்ட பொஷிஷனில்தான் இறங்குகிறார்.

தனக்கு வசதியாக எந்த இடம் இருக்குமோ அங்குதான் பட்டிங் செய்கிறார் . ஆனாலும் அவரால் சரியாக பட்டிங் செய்ய முடியவில்லை.

ஆனால் டோனியிடம் சில விடயங்கள் சரியாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கிறது. அதை அவர் சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link