இதுவரை எடுக்காத ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று வழங்கப்படவிருந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் ...
தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள், புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட ...
சுடுநீர் மூலமாகவேதான் கொரோனாவிலிருந்து மீண்டதாக கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக நோயாளி தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளிதான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடுநீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் ...
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது. இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் ...
கொரோனா நோயாளி பயணித்த வாடகை வாகனத்துக்கு பிரதேசவாசிகள் இணைந்து தீ வைத்துள்ளனர். கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வாகனத்தை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர் இந்த ...
கொரோனா வைரஸால் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இதல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நேத்ரா வீ.V அலைவரிசை ஊடாக தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ் மொழிமூலம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கமைவாக நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் தரம் 6-11 ...
வட இலங்கைச் சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, வட இலங்கைச் சங்கீத சபையினால் 2020 மே, யூன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சகல தரங்களுக்குமான சகல பரீட்சைகளும் தரம் 5 ...
சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. யாழில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே யாழ்.மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊரடங்கு ...