யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். அதன் போது, உரிய முறையில் ...
முல்லைத்தீவு – முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், வீதியோரமாக பொலிஸாரின் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன்போது, அந்த வழியாக ...
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ...
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் ...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ...
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் ...
இலங்கையில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, சந்தை நிலவரம் குறித்து விளக்கமளித்தார். அவர் தெரிவிக்கையில், ...
அநுராதபுரம் – அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இத் துயர சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு ...
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் இன்று (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு ...
இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தட்டம்மையை முற்றாக ஒழித்த நாடு என 2019ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும், 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் ஆங்காங்கே தட்டம்மை நோயாளர்கள் ...