இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 13 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என உரைக்கப்பட்டாலும் உலகமெங்கும் சைவநீதி விளங்குவதற்கு தமிழகமே மூலாதாரமாக இருந்திருக்க வேண்டும். ஆம், பன்னிரு திருமுறை களையும் தந்தருளிய தென்னாடாகிய தமிழகமே உலக மெங்கும் சைவநீதி விளங்க வகை செய்திருத்தல் வேண்டும். ஆனால் பிராமணர் ...
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், ...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ...
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ...
முதற்தடவையாக humanoid எனப்படும் மனித ரோபோக்களை பயன்படுத்தி தமது தயாரிப்புகளை மேற்கொள்ள BMW நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த ரொபோக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் கோடைக் காலத்தில் Hexagon Robotics தொழில்நுட்பத்தில் உருவான இரு மனித ரோபோக்களை பயன்படுத்தி இந்த ...
ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் (28) வரையான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ...
என் சிறுவயதில் கம்யூனிஸ்ட் குமாரசாமி எனும் சிறுகதையைப் படித்த ஞாபகம் உண்டு. ஆம், சிறுகதையை எழுதியவர் யார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம்பெற்றிருந்தமை நினைவில் உண்டு. கதை வருமாறு; கம்யூனிஸ்ட் குமாரசாமி என்பவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகி றார். ...
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ...
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (27) இரவு சுமார் 11.00 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று ...