திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று இன்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் ...
வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், நள்ளிரவு வேளைகளில் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழையும் நபர்கள் ...
வடமாகாணத்தின் முதலீடுகளில் தென்னைச் செய்கைக்கான முதலீடுகள் பெருந்தொகையாக இருப்பதை நாம் எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. உண்மையில் வடக்கில் யுத்தத்தால் அழிந்த தென்னந்தோட்டங்களை மீள்நடுகை செய்தது மட்டுமன்றி, பற்றைகள் வளர்ந்திருந்த காணிகளைத் திருத்தம் செய்து அங்கும் தென்னங்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கக்கூடிய நம்மவர்கள் வடமாகாணத்தில் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 84.51 ...
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சி.என்.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. எங்களிடம் ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு ...
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியொன்றை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த ...
யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. வேலணை நகர் வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல கோடி ரூபாய் ...
உயில் அன்றைக்கு ஒருநாள் உயில் என்றால் என்ன? செட்டில்மென்ட் என்றால் என்ன? என்று பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்ட சிலபேர் உயிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக பேசினால் பரவாயில்லை என்றார்கள். அதனாலே விபரம் தெரிந்தவர்களைக் கேட்டுவிட்டு அதன்பின் தான் இப்போது பேசுகிறேன். நேயர்கள் கேட்டிருந்த உயில் சம்பந்தமான கேள்விகளுக்கு ...