மகப்பேற்றுக்கு இலவசம் ஆட்டோவில் எழுதியிருந்த மகத்துவம் பேராண்டி… நடிகர் ரஜினி காந்தின்ர பாட்ஷா படம் பார்த்தனியே? அதில ரஜினி ஆட்டோ ஓட்டுறவரா நடிச்சிருப்பார். அவரின்ர ஆட்டோவுக்குப் பின்னுக்கு “பிரசவத்துக்கு இலவசம்” எண்ட வாசகம் எழுதியிருக்கும். அதைவிட “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” எண்டுற பாட் டில நான் பிரசவத்திற்கு இலவசமாவாறேன் ...
மானிப்பாய் துர்க்கா மில்லடி வீதியின் நிலை அறிவார்களா? பேராண்டி… போன கிழமை மானிப்பாய்க்கு ஒரு அலுவலாப் போனனான். மானிப்பாய் காரைநகர் வீதியில் முனியப்பர் கோவிலடி, துர்க்கா மில்லடியில ஒரே சனக்கூட்டம். என்ன ஏதெண்டு பார்த்தால், ஒரு பொம்பிளப்பிள்ளையும் தகப்பனும் மோட்டார் சைக்கிளில வரேக்குள்ள வீழ்ந்ததில அந்தப்பிள்ளையின்ர கையில காயம். ...
களுத்துறை ஹொரணை பகுதியில் இயங்கின முதியோர் இல்லம் ஒன்றில கடந்த வாரம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில 13 முதியவர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கினம் என்ற செய்தியைப் படிக்க நெஞ்சம் பதைபதைச்சுப் போச்சுது. ஓம் பேராண்டி, எதிர்பாராத நேரத்தில தீப்பரவல் ஏற்பட்டதால வயது முதிர்ச்சி உடல் நலைக் குறைவுப் பாதிப்பில ...
திருமண – நிகழ்வுகளில் காணாமல் போகும் பண்பாடு – கலாசாரம் பேராண்டி… எங்கட பண்பாடு கலாசாரத்தைச் சீரழிக்கிறது பேரினவாத சிங்கள அரசியல்வாதிகள்தான். அவர்கள் திட்டமிட்டு அதைச் செய்யினம் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறம். ஆனால் உண்மை எது தெரியுமே. எங்கட பண்பாடு-கலாசாரச் சிதைவுக்கு நூறு விகிதம் நாங்கள் தான் காரணம். ...
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு…பேராண்டி… போனமுறை நீ விடுமுறையில வந்து நிக்கேக்குள்ள பேஸ்புக் பாக்க சொல்லித் தந்த பிறகு நேரம் கிடைக்கேக்குள்ள நல்ல விடயம் எதையாவது பாக்கிறனான். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் தான் அது நஞ்சு பேராண்டி. அது சிலருக்குப் புரியிறதில்லை. அண்டைக்கு ஒரு காணொளி பார்த்தன். ...
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் விரைந்து திறக்கப்பட வேண்டும்பேராண்டி… மனித மனம் மிகக் கொடுமையானது. அடுத்தவரின்ர மனதை கொஞ்சமும் சிந்திக்காமல் எடுத்தெறிஞ்சு கதைக்கிறது, கோபப்படுறது, மனம் கோண நடந்து கொள்ளுறது, மதிப்புக் கொடுக்காமல் செயற்படுறது இப்படி சகிக்க முடியாத செயல்களைச் செய்யக் கூடியது மனித மனம். வீட்டில் வளர்க்கிற நாயை ...
நோயாளி இறந்து ஒருவருடம் கழிந்தது சத்திர சிகிச்சைக்கு திகதி பிறந்தது பேராண்டி… “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” எண்டொரு பழமொழியுண்டல்லோ. அதின்ர பொருள் தெரியும்தானே. அதததை அந்தந்தக் காலத்தில் செய்திடவேணும். அப்பிடிச் செய்யாமல் விட்டிட்டு, எல்லாம் முத்தி வெடிச்சதுக்குப் பிறகு பலன் தேடிப் பரிகாரம் செய்யிறதிலை எந்தப் ...
மாணவர்களைக் கண்கலங்கவைத்த பொலிஸ் அதிகாரியின் பேச்சுபேராண்டி… தென்னிலங்கைப் பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி பேசிய பேச்சைக் கேட்டு அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள் அழுதிருக்கிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியிருந்தது. நானும் அதைப் பார்த்தனான். அந்தப் பொலிஸ் அதிகாரி அப்பிடி என்ன சொன்னவர், ...
சக்கரைத் தண்ணீரும் மோரும் சர்பத்தாகிப் போனது வேதனை பேராண்டி… வெயில் கொடுமை தாங்க இயலுதில்லை. அவ்வளவுக்குப் படு பயங்கரமா இருக்குது. இயற்கை சமநிலை குழம்பினதுக்கான அச்சுறுத்தலே இது. ஆனாலும் தனிமனித மனமாற்றம் இல்லாமல் இந்தப் பூமியை பசுமை யாக்க முடியாது. பேராண்டி நாங்கள் சின்னப் பிள்ளையா இருக்கிற காலத்தில ...
வாகன உரிமை மாற்றம்; அலைக்கழிக்கப்படும் மக்கள் பேராண்டி… அரச திணைக்களங்களில அநேகமானவர்கள் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறவை எண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். ஒரு சில திணைக்களங்களில அப்பிடி இருக்குமோ என்னவோ, அநேகமான அரச திணைக்களங்களில வேலை கடுமையா நடக்குது. இதை மறுக்கமுடியாது. நரம்பில்லாத நாக்கால எதையும் கதைக்கலாம். ஆனால் ...