பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி புதுச்சேரியில் பலம் பொருந்தியதாக இருப்பதைக் காணமுடிகிறது. அதேநேரம் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பனவும் புதுச்சேரி மாநிலத்தில் தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதில் அதீத கவனம் செலுத்துகிறது என்பதை அங்கு ...
புதுச்சேரியில் பத்து ஆண்டுகள் பாரதியார் அடைக்கலம் புகுந்திருந்தார் என்பதற்குள் அந்தப் 10 ஆண்டுகளும் பாரதியாருக்கு மிகவும் மகிழ்வான காலமாகக் கடந்திருந்தது என்பதை புதுவையில் இருந்த போது அவர் எழுதிய குயில் பாட்டு, புதிய ஆத்திசூடி, பாப்பாப்பாட்டு, பெண் விடுதலைப் பாடல்கள் போன்றன உறுதி செய்கின்றன. கூடவே புதுவை மணக்குள ...
தொல்லியல் சான்றுகளைப் பாதுகாத்து அவற்றைப் பேணுவதில் புதுச்சேரி மாநில அரசு கொண்டுள்ள கருசனை எத்துணை உயர்வான தென்பது, சுப்பிரமணிய பாரதியார் வாடகைக்கு அமர்ந்த வீட்டைப் பாதுகாப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆம்,எதையுமே பாதுகாக்க முடியாத எங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்சேரிக்குச் சென்ற எமக்கு, பாரதியார் இருந்த வீட்டைப் ...
புதுச்சேரிப் பயணத்தின் பயன் யாது? என்று கேட்டால் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த வீட்டைத் தரிசித்தது என்பேன். ஆம்,ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார். அதனால் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்வதற்காகத் தேடிய போது, பாரதியார் தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள ஓர் ...
புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த வலம்புரி மஹா கணபதிப் பிள்ளையாரின் கோலம் மனதை கொள்ளை கொண்டது. கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்றதும் ஆலய நிர்வாகிகளும் சிவாச்சாரியர்களும் சேர்ந்து கம்பவாரிதியை வரவேற்றனர். 36 அடி உயரமான ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் எம்மை அறியாமலே வணங்கவும் வழி ...
ஒப்பற்ற தியாகி மாரீசன் எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். குப்பகர்ணனோ, இந்திரஜித்தோ ஒப்பற்ற தியாகிகள் அல்ல என என் வாதத்தை முன்வைத்து அமர்ந்த போது, நடுவர் ஆயத்தின் தலைமை நீதிபதி ஓய்வு நிலை நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள், மாரீசன் நேரில் வந்தால் கூட இப்படி வாதிட்டிருக்க முடியாது ...
மூன்றாம் நாள் நிகழ்வு புதுச்சேரிக் கம்பன் விழாவின் 3 ஆம் நாள் விழா 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அமர்வில் சிந்தனை அரங்கம் முதன்மை பெற்றிருந்தது. சிந்தனை அரங்கத்திற்கு பேராசிரியர் மு.இராமச்சந்திரன் தலைமையேற்றிருந்தார். ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இராமச்சந்திரன் யாழ்ப்பாணக் கம்பன் விழா விலும் கலந்து கொண்டவர். சிந்தனை அரங்கில் புலவர் ...
இரண்டாம் நாள் காலை நிகழ்வில் இளையோர் அரங்கைத் தொடர்ந்து வழக்காடு மன்றம் இடம்பெற்றது. சுக்ரீவனோடு வாலி பகை கொண்டது குற்றம் என்பது வழக்கு. வழக்காடு மன்றத்தின் நடுவர் பொறுப்பை மருத்துவர் சுதா சேஷய்யன் ஏற்றிருந்தார். வழக்கை கவிதா ஜவகர் முன்வைக்க ம.எழிலரசி அதனை மறுத்தார்.வழக்காடு மன்றம் விறுவிறுப்பாக நகர்ந்தது. ...
புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல் நாள் அமர்வின் காலை நிகழ்வு நிறைவடைந்த பின் அனைவருக்கும் மதியபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநகராட்சிமன்றத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டது. முன்னதாக அந்த மண்டபம் அமைந்த வளாகத்தில் பிரமாண்டமான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. விருந்தோம்பல் நிகழ்விற்கு வருக வருக ...
புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல்நாள் காலை அமர்வானது விழா மலர் வெளியீடு, விருதுகள் வழங்கிக் கௌரவித்தல், வழக்கறிஞர் த.இராமலிங்கம் அவர்களின் கம்பன் தமிழ் நூல் வெளியீடு, கம்பன் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் என்ற நிகழ்வுகளுடன் எழிலுரையும் இடம்பெற்றது. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ...