BMW காரை தயாரிக்கவுள்ள மனித ரொபோ
Share
முதற்தடவையாக humanoid எனப்படும் மனித ரோபோக்களை பயன்படுத்தி தமது தயாரிப்புகளை மேற்கொள்ள BMW நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த ரொபோக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் கோடைக் காலத்தில் Hexagon Robotics தொழில்நுட்பத்தில் உருவான இரு மனித ரோபோக்களை பயன்படுத்தி இந்த வேலைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான Leipzig தொழிற்சாலையில் இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது எதிர்கால வாகன உற்பத்தி துறையாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


