கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றால் மேலும் 9 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176ஆக (ஜன வரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. ...
புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கொரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர் வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் ...
கொழும்பு முழுவதையும் முடக்க உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் கொழும் பில் வசிப்பதனால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாயினால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குமுழமுனை பகுதியை சேர்ந்த இராசலிங்கம் ரமேஷ் (வயது-26) என்ற இளைஞனே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. பக்கத்து வீட்டு நாயொன்று குறித்த இளைஞன் வீட்டிற்குள் ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்றிரவு ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யாழ்.அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மத ஆராதனையில் ...
சமயங்களை விமர்சிப்பதை தவிர்த்து உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யங்கள் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் அமைதி ...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் ...
இதுவரை எடுக்காத ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று வழங்கப்படவிருந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளி பயணித்த வாடகை வாகனத்துக்கு பிரதேசவாசிகள் இணைந்து தீ வைத்துள்ளனர். கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வாகனத்தை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர் இந்த ...
கொரோனா வைரஸால் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இதல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.