அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியைப் பெற்ற ஒருவர் சீமெந்து கொண்டு சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதுடன் பார ஊர்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து கிளிநொச்சிக்கு கோதுமை மாவினை கொண்டு செல்வதற்கு என அனுமதியை பெற்று பார ஊர்தியில் 400 பைக்கற் சீமெந்தினை ...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் 14ஆம் திகதி ...
பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். 30 வயதுடைய ஆனந்தவர்ண்ணன், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனாவார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனோ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்தில் ...
யாழ்.மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பான முறைப்பாடுகளையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை உத்தியோத்தர்களினால் நேற்று பல விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக ...
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்குச்சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாசபயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாட லின் போது ...
யாழ்ப்பாணம், கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்த மான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்கு வரத்துச் சபையின் ...
இன்று ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரையும் மார்ச் 30ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் ...
தாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் பரிசோத னைகளுக்குட்பட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனாத் தொற்றில்லையென நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொற்றுள்ளதென அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனாத் ...
கனடாவில் கொரோனா (கோவிட் -19) தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் மரண மடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். ஒன்ராரியோ மாகாணத்தின் கிங்ஸ்ரன் வைத்தியசாலையின் ஆலோசகராக இவர் கடமையாற்றியிருந்தார். ஏற்கெனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறிய இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான ...