கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ...
சிலாபம், நாத்தாண்டியா பகுதி யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேற்று முன்தினம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து பேர் கொண்ட இக்குடும்பத்தில் ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் யாழ.போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலை யில் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து ...
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் ...
யாழ் வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து கஞ்சா கொண்டு வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படகில் ...
ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒன்பது நாட்களுக்குள் 6, 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் களிடமிருந்து 1,533 வாகனங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ...
மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களி லும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங் களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து ...
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதி யிலேயே குறித்த நபர் கள் கைது செய்யப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள் கள் உட்பட 771 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ...
கூட்டுறவுத் திணைக்களத்தால் அபி எனதுரு கெதர இன்ன அதாவது நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட் டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக் கப்பட்டது. இந்தத் திட்டம் நேற்று முன் தினம் ...
ஊரடங்குச் சட்டத்தால் வாழ் வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குப்பிழானைச் சேர்ந்த 47 குடும் பங்களுக்கு குப்பிழான் விக் னேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களால் ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.