முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு ...
கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 ...
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் ...
அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் ...
சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு ...
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தார். குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ...
அம்பலாங்கொடை, பலப்பிட்டிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, ஒரு ரவை, 16 தோட்டாக்கள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் ...
தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். நேற்று (03) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ...
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து குறித்த இருவரும் ஒரு படகில் தொழிலுக்காகச் சென்றுள்ளனர். வழமையாக நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று ...
யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து 20 போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ...