Type to search

Local News

ஊரடங்கை மீறிய 11 ஆயிரத்து 019 பேர் கைது

Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.

இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு எட்டு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன
.
இதன்போது ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும் சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பொலிஸார். இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link