காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மேலுமொரு கர்ப்பிணித் தாயொருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கோவிட் தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ...
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக புதன்கிழமை கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அநுராதபுரத்தில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை வாரந்தோறும் மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகள், முன்பள்ளிகள், அற நெறிப் பாடசாலைகள், பல்கலைக்கழகங் கள் மற்றும் கல்வி வகுப்புகள் மீண்டும் ...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வசாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கோவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது. நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ...
நாட்டில் கோவிட் – 19 நோய்த் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். இதனால் மருத்துவமனைகளில் தொற்றாளர்களை ...
மனம் பற்றிப் பேசாத ஞானிகள் இல்லை. ஒரு மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனின் மனமே மூலகாரணமாக அமைகிறது. அதனாலேயே மனமது செம்மையானால் மந்திரங்கள் செப்ப வேண்டாம் என திருமூலர் அறிவுரை வழங்கினார். எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும் அதனைச் செயல்படுத்தக் கூடிய மனப்பாங்கு இல்லை எனில், அறிவால் எந்தப் பயனும் ...
சமகாலக் கொரோனாத் தொற்றால், நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் தினத்தை நடத்த முடியாதுள்ளதாக பெளத்த சாசன அமைச்சு அறிவித்துள்ளது. கெளதம புத்தபிரான் பரிநிர்வாணமடைந்த வெசாக் பெளர்ணமி புனித நாளை, நயினா தீவில் கொண்டாட முடியாமல் போயிற்று என்பதை நினைக்கும்போது எம் இதயம் கனக்கவே செய்கிறது. கெளதம புத்தபிரான் உலகத்துக்கு ...
எழுமாற்றுப் பரிசோதனையில் வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின. அதில், செட்டி குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குருக்கள் புதுக் குளம் ...
அரச வெசாக் தினத்தை இம்முறை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கரு த்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை அரச வெசாக் தினத்தை யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரை யில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவை ...
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் யாழ். கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது. பொதுச் சந்தை நடவடிக்கைகள் நேற்றுக் காலை இடம்பெற்றவேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப் பதற்காகச் சென்றிருந்தனர். அதன்போது சந்தையில் வியாபாரிகள் உட்பட பலர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். ...
விபரீத முடிவெடுத்து கணவன் உயிரைமாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழி யில் தனது உயிரைத் துறந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது ...