கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 3 சிறுவர்களும் தந்தையும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றிரவு ஈடுபட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இது குறித்து பெண்ணின் கணவன் தெரிவிக்கையில், கிளிநொச்சி அக்கராயன் ...
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்கள தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றில் நேற்று நிறைவேறியது. இதன்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் 89 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு அரச ...
கொரோனாத் தொற்று இலங்கையில் வேகமெடுக்கத் தலைப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி தாமாக வைத்தியசாலைக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூவாயிரம் என்ற எல்லையை எட்டி விட்டது. பொதுவில் மக்கள் மத்தியில் சென்று எழுமாறாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைக் கடந்து போகும் என்பது அனுமானிக்கக் ...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கெரோனா வைரஸ் இலங்கையை கடுமையாக ஆட்டிப் படைத்து வருகின்றது. புதுவருட கொவிட் கொத்தணியில் நாட்டில் ஒரே நாளில் 3623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 3623 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் மொத்த கொரோனா ...
யாழ். மாவட்டத்தில் 69 பேர் உட்பட 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 பேர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நெற்றைய தினம் 581 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கும் ...
கொரோனாவால் மன்னாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த 4ஆவது மரணம் இதுவாகும். கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. நாட்டை முடக்கும் தீர்மானத்தை மட்டும் எடுக்கவேண்டாம் என அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் சகல தரப்பினரதும் கருத்துக்களை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது என மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் ...
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று. பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது. அவரவர் தத்தம்பாடு. நிர்வாகப் பணிகள் எப்படியாக இருக்கிறது ...