இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார். மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் ...
ஹட்டன் – பொககவந்தலாவ பாடசாலை பிரதான வீதியின் நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று (22) காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணத்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த ...
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது. ...
இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி, 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2026 மே 20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் ...
அடுத்த வாரமாகும்போது மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகளால் (Basis points), அதாவது 0.5% அல்லது 1% இனால் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (21) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், ...
குருவும் சீடனும் நாங்கள் நிறைய குருமார்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களிலே இரண்டு வகை உண்டு. குருமார்கள் பார்த்து தேர்ந்தெடுக்கின்ற சீடர்கள் ஒரு வகை. இன்னொரு வகை எப்படி என்றால் சீடர்களே குருமார்களைத் தேர்ந்தெடுப்பது. குருமார்கள் சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறது தான் உயர்வு, நான் ...
“.. இராவணன் மேலது நீறு” எனத் திருமுறை பாடும் அளவில் மிகச் சிறந்த சிவபக்தன் இராவணன். சிவப்பரம்பொருள் மீது அவன் கொண்ட அளவற்ற பக்தி காரணமாக அவனுக்கு சிவ சங்கரன் போர் வாளை வழங்கினான். எனினும் போரில் சங்கரன் கொடுத்த வாளையும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை வேந்தன் ...