குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண்ணே ...
இந்த வருட இறுதிக்குள் முக்கிய புள்ளிகள் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த ...
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன. ரங்க ராஜபக்சவின் உடலம் ...
சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண் வைத்தியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொழும்பில் ...
திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிதி பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 ...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு மேலும் கடுமைப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள் தங்களது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் முன்பே ...
காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை ...
எடையற்ற நிலை “எடையைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்” என்று கேட்டார் ஒருவர். “இது என்ன பெரிய விடயம் பேசாமல் புறப்பட்டு மேலே ஆகாயத்துக்குப் போய் விடுங்கள்! அங்கே போனால் உங்கள் எடை குறைந்துவிடும்!” என்றார் இன்னொருவர், இவர் வேடிக்கையாக இப்படி சொன்னாலும் கூட அவர் அப்படி சொன்னதிலே ஒன்றும் ...
அதிர்ச்சி வைத்தியம் ஒரு சீடன். வெளியூர் புறப்படுவதற்குத் தயாராக இருந்தான். ரொம்ப தூரம் போகப் போகிறான். திரும்பி வர நாளாகும். புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளிலே ஈடுபட்டிருந்தான். அந்த சமயம் பார்த்து இன்னொரு சீடன் அவனிடம் வந்தான். “நம் குரு உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார். வா!” என்று கூப்பிட்டான். ...
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளனை அறியாதவர்கள் இருக்க முடியாது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழகம் வந்திருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து முருகன், ...