வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ...
விடத்தற்பளைப் பகுதியில் தனிமையில் சென்ற ஆசிரியை ஒருவரின் ஒரு பவுண் நிறை கொண்ட சங்கிலி நேற்று சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்களால் அறுக்கப்பட்டது. கெற்பேலிப் பகுதியில் இருந்து விடத்தற்பளை நோக்கி தனது வீட்டிற்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ...
மீசாலை வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழு ஒன்று குடும்பப் பெண் மீது சரமாரியாக வாள்வீச்சு மேற் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மீசாலை வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 40 ...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மௌன கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர். வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம் பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் அவர்கள் எழுந்தார். சித்தங்கேணி ஞானபண்டிதக் குருக்கள் சபாரட்ண ...
நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன் என்றார் கீதோபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மா. அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காகக் கண்ண பரமாத்மா எடுக்கின்ற அவதாரம் பத்து என்றாயிற்று. எனினும் அதர்மம் வலிமை பெற்றிருக் கிறதேயன்றி தர்மம் மேலோங்கியதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக, இலங்கையைப் பொறுத்த ...
தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண்ணிடம் லாவகமாக பேசி இரு தங்க மோதிரங்களை எடுத்து சென்ற மீன் வியாபாரி தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் கரணவாய் மத்திப் பகுதியிலுள்ள தனிமையில் வசித்து வந்த தங்க வேலாயுதம் சின் னத்தங்கம் என்பவர் வீட்டிலேயே ...
யாழ்ப்பாண நகரத்தை அண்டிய பகுதிகளில் நேற்று திடீரென கேட்ட தொடர் குண்டு வெடிப்புச் சத்தங்களால் மக்கள் மத்தியில் இலேசான பதற்றம் தென்பட்டது. நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாண நகரம், வலிகாமம் தென்மேற்கு, தீவகப் பகுதிகளில் இந்த தொடர் குண்டு சத்தங்களை கேட்க முடிந்தது. பெரும் சத்தத்தில் குண்டுகள் – குறிப்பிட்ட ...
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக்கும் பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தளபாடங்களைத் தீயிட்டு கொளுத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் கதவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த ...
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஞா கோன்க் ரீட்ஜூக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் நடை பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் வெற்றி மற்றும் கொரோனா நோய்ப் பரவல் தடுப்புத் தொடர்பில் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் ...