உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய பிரென்ட் ரக மசகு பீப்பாய் ஒன்றின் விலை 96.25 டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக காணப்படுகிறது. ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் ...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என ...
அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணித்ததுள்ளார்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் ...
நுவரெலியா கிரகரி வாவியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் படகு ஒன்று நேற்று (19) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாவியில் நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் படகு ஒன்று வேகமாக பயணித்துள்ளது. இந்நிலையில், நீரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அங்கு பயணித்த மற்றுமொரு படகு விபத்துக்குள்ளானது. அதில் ...
லுாசியானா: அமெரிக்காவின் லுாசியானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஒன்று முதல் 14 வயதுடைய 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. குடும்ப சண்டை காரணமாக அங்கிருந்த 11 பேர் ...
புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ...
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ...
கீரிமலை கடலில் நீராடிய ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார். நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் , வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் ...
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன. அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இன்று (19) அதிகாலை 01:32 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் ...