Type to search

Headlines News World News

கொங்கோவில் உக்கிரமடையும் இபோலா

Share

கொங்கோ இராச்சியத்தில் பரவி வரும் இபோலா வைரஸ் தாக்கம் உயர் நிலையிலிருந்து அதி உயர் நிலைக்கு மாறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் இந்த நிலை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் ஆபிரிக்க வலயத்துடன் ஒப்பிடுகையில் உயர் மட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் தெரிவித்துள்ளார்.

இபோலா வைரஸின் அரிய வகை திரிபான Bundibugyo எனப்படும் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கொங்கோ இராச்சியத்தில் இபோலா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 700க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தடுப்பூசியை உருவாக்கும் பணியில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்பூசியை ஆய்வு கூட பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு 2 அல்லது 3 மாதங்கள் எடுக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link