Type to search

Headlines Local News News

Green Card விண்ணப்பத்தில் மாற்றம்

Share

புதிய குடியேற்ற கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தற்காலிக விசாவில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நபர்கள் “Green Card” பெற விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் மாணவர் விசா, சுற்றுலா விசா அல்லது வேலை விசாவில் அமெரிக்காவில் இருந்த பலர் ‘“Adjustment of Status” (AOS) என்ற முறையின் மூலம் நாட்டை விட்டு வெளியேறாமல் “Green Card” -க்கு விண்ணப்பித்து வந்தனர்.

எனினும் தற்போது US Citizenship and Immigration Services (USCIS) வெளியிட்டுள்ள புதிய கொள்கை அறிவிப்பின் படி, Adjustment of Status” என்பது இனிமேல் ‘அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்படும் சிறப்பு நிவாரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தற்காலிக வேலை விசா வைத்திருப்போர் உள்ளிட்ட அனைத்து non-immigrant visa வைத்திருப்போரையும் பாதிக்கும். மேலும், இந்த நடைமுறையின் மூலம் அனுமதி காலம் முடிந்த பின்னரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link