கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டதாக எமது ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான உத்தரவு, எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது. கொழும்பு மேல் ...
ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ...
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது நிலக்கரி இறக்குமதி, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த ஏனைய ...
வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக வவுனியா அஞ்சல் திணைக்களத்தில் போதிய வாகன வசதிகள் இல்லாமையினால், அஞ்சல் பொதிகள் மற்றும் கடிதங்களை ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்ட இரு சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்னஉப்போடையில் உள்ள வாவியில் நேற்று மாலை இரு சடலங்கள் மிதந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலங்களை மீட்டு ...
திபெத்தில் இன்று அதிகாலை 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்நிலையில் நில அதிர்வு இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணிக்கு சுமார் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவலும் ...
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது 28,061 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 255 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 155 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் ...
கரடியனாறு பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று (07) கைதுசெய்துள்ளனர். நேற்று குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதுடன் சித்தாண்டியைச் ...