Type to search

Headlines News Sports

இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

Share

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. 

இலங்கை நேரப்படி நேற்றுமுன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Danni Wyatt-Hodge ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றார். 

இந்நிலையில் 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link