இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தவுள்ள உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி “சங்கமம் 2026”, எதிர்வரும் 2026 ஜூன் 14ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ...
31 ஆண்டுகள் சிறைவாசியாக நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கிய பேரறிவாளன், இப்போது வழக்கறிஞராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் சட்டம் பயின்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் இந்தப் பயணம் குறித்து ஜூனியர் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த் தெறிந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத் திருக்கிறது. பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட முடியாத ...
மாணவர்களைக் கண்கலங்கவைத்த பொலிஸ் அதிகாரியின் பேச்சுபேராண்டி… தென்னிலங்கைப் பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி பேசிய பேச்சைக் கேட்டு அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள் அழுதிருக்கிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியிருந்தது. நானும் அதைப் பார்த்தனான். அந்தப் பொலிஸ் அதிகாரி அப்பிடி என்ன சொன்னவர், ...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றுள்ளது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை ...
தென் மாகாண சபையின் முன்னாள் ஆளுநராகப் பதவி வகித்த விலீ கமகே, இன்று (11) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளார். ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (11) முற்பகல் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். உதய கம்மன்பில எழுதிய நூலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றுமொரு தாக்குதல் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ...
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது ...
நயினாதீவு நாகபூசணித் தாயாரின் காணிக்கைப்பணம் களவு போவதோ! வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். ...