அர்ச்சுனாவின் பதாகைக்கு செருப்பு மாலை
Share
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை இடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில , அர்ச்சுனாவின் 10 அடி பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு பிரதான வீதியில் வைக்கப்பட்டுள்ளது.


