நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷீலா ...
வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார். ...
நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 20 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது வான்பாய்ந்து வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளன: நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதன் காரணமாக, குறித்த ஆறுகளை அண்டியுள்ள ...
நாடு முழுவதும் உள்ள 200 பழமையான தபால் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக தபால் அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட பகவந்தலாவ பிரதேச தபால் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்கள் ஐதீகமாக்கப்படும் உத்தியோகபூர்வ நிகழ்வில் ...
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வாவியில் ...
ஐந்து வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து ...
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் நடைபெற்ற இது தொடர்பான விசேட ...
இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையுடனான வானிலையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று (17) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் நேற்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ...
கம்பளை, தொரகல – கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் ...