யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற மோதல் சம்பவம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காகத் தனிநபர் விசாரணை ஆயம் நியமனம் இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை கூடிய சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களின் அட்டகாசத்தினால் விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். கலைப்பீட அவை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நேற்று ...
வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் நேற்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக் காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக்காட்டு பகுதியில் கஞ்சா வியாபாரம் ...
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும், வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான ஏழு ...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கம்பஹா கொத்தணி கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்ஸில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த ஒருவரால் பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தையடைந்த போது சமரச முயற்சியில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா மற்றும் பல்கலை நிர்வாகம் ஈடுபட்டபோது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் ...
கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் ...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார், எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். ...
கடந்த 2015 தொடக்கம் 2019 வரையில் இலங்கை மின்சாரசபை 181.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும், தேசிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இந்தக் கால எல்லைக்குள் புனரமைக்கப்படாதமையும், மின்சார கட்டணங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யாதமை மற்றும் மின்சார சபைக்கு அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையுமே பிரதான ...