ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த அனுமதி தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1500 ...
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் மீசாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்ப வரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான 5ஆவது உயிரிழப்பு இதுவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா ...
பிரேசிலிலுள்ள அமேசன் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டில் இதுவரை ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்றிரவு ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யாழ்.அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மத ஆராதனையில் ...
சமயங்களை விமர்சிப்பதை தவிர்த்து உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யங்கள் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் அமைதி ...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் ...
இதுவரை எடுக்காத ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று வழங்கப்படவிருந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் ...