Type to search

Headlines

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நல்லூர்த் திருவிழாவில் பங்கேற்கலாம்

Share

நல்லூர் ஆலய பெரும் திருவிழாவில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்ற பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.

அங்கப்பிரதிஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் நேற்று நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோத கர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும் சுகாதார துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோக பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.
மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link