ஆச்சி அறிவுரை
Share
வீதியில் குப்பை கொளுத்துபவர்களை தண்டிக்கும் சட்டம் வேண்டும் பேராண்டி…
எங்கட சமூகத்திட்டை பொறுப்புணர்வு எண்டுறது அறவே இல்லாமல் போச்செண்டுதான் சொல்லுவன்.
அந்தளவுக்கு எங்கடயாக்கள் பொறுப்பற்று நடக்கினம். ஏன் இப்பிடி நடக்கினம் எண்டு எனக்குள்ள கேள்வி. ஏனெண்டால் எவ்வ ளவு பொறுப்புணர்வுள்ள இனமொண்டு. ஒரு விசயம் இரண்டு விசயத் தில இல்ல ஒட்டுமொத்தமா பெறுப்புணர்வு இல்லாத இனமாகிட்டுது தமிழ் இனம்.
வீட்டுக் குப்பையை எடுத்துக்கொண்டு போய் நடுச்சாமம் நடுச் சந்தியில கொட்டுற ஒரு விசயமே இந்த இனத்தின்ர சீத்துவக்கேட்டைச் சுட்டிக்காட்டுது.
பேராண்டி, போன வாரம் வெளிவந்த சாராயக்கடை விசயம் பலபேருக்குக் சுட்டுப் போட்டுது.
ஒராள் என்னோட தொடர்பு கொண்டு சரியாச் சொன்னியள் ஆச்சி. உந்தச் சாராயக் கடைகளால எங்கட சமூகம் நாசமாப் போகு தெண்டு தன்ர ஆதங்கத்தைக் கொட்டினார்.
பேராண்டி வீதியோரங்களில சேருற இலை, குழைக் குப்பைகளை அந்த வீட்டுக்காரர் வீதியோரமா கூட்டிக் குவிச்சு அதுக்கு நெருப்பு வைச்சுவிட அது கொழுந்துவிட்டெரிஞ்சு புகை மண்டலமா வீதி முழுதும் நிறைஞ்சு நிக்கும். அந்தப் புகை மண்டலத்தைக் கடந்து போற தெண்டுறது பெரும் சிரமம். அவ்வளவுக்கு புகை வீதியில மண்டிக் கிடக்கும்.
பள்ளிக்கூடம் போற சின்னப் பிள்ளைகள் வேலைக்குப் போற ஆக்கள் எண்டு எல்லாரும் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவினம்.இப்படித்தான் பலாலி வீதியில ஒருத்தர் குப்பையைக் கொழுத்தி விட நெருப்புப் புகை: அதைத் தட்டிக் கேட்ட ஒருத்தருக்கு வீட்டுக்காரர், கடும் கோபத்தோட “இது என்ர இடம், நான் கொழுத்துவன் விடுவன் மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டுபோ” எண்டு சண்டித்தனம் கதைச்சார்.
என்ன செய்யிறது இருக்க வேண்டியவர்கள் இல்லாததால யார் சண்டித்தனம் காட்டுறது எண்ட விவஸ்தை இல்லாமல் போச்சுது.
எங்கட தமிழ்ச்சனம் திருந்த வாய்ப்பில்லை பேராண்டி. எதுக்கெடுத்தாலும் விதாண்டா வாதம், குதர்க்கம் பேசத்தெரிஞ்சு வச்சிருக்கிற ஆக்களோட கதைக்க மனம் வருமோ? என்ன செய்ய எல்லாம் காலம் செய்த கோலம் எண்டுறதை விட வேற எதை சொல்ல ஏலும்.
ஆச்சி வருவா…


