கோர வெப்பத்தால் குறைந்து வரும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம்
Share
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 34 அடி வரை குறைந்துள்ளது. இதனால் 1969-ஆம் ஆண்டு நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றை தற்போது மக்கள் நேரில் காண முடிகிறது.
இந்த அரிய காட்சிகளைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். எனினும், நீர்த்தேக்கப் பகுதியில் சகதி அதிகம் இருப்பதால் அங்கு செல்வதையும், நீராடுவதையும் தவிர்க்குமாறு மஸ்கெலியா பொலிஸாரும் பிரதேச சபையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


