Type to search

Headlines Local News News

மட்டக்களப்பு கொலை கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களுக்கு 15ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Share

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிவான் நீதிமன்றம் நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களையும் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் இம்மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று குறித்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே மன்றுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஏனையவர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நிகழ்நிலை ஊடாக குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது குறித்த வழக்கின் சந்தேக நபர்களான ஆறு பேரையும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்ததுடன் தொடர்பான வழக்கு இம்மாதம் 15ம் திகதி வழக்கு விசாரணை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link