கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!
Share
Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்கு கூகுளின் AI மாதிரிகளைப் பயன்படுத்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கூகுள் நிர்வாகம் கையெழுத்திட்டதும், AI தொழில்நுட்பங்களின் அதிகப்படியான ஆற்றல் நுகர்வு காரணமாக, கார்பன்-நடுநிலை அடையும் இலக்குகளை கூகுள் அமைதியாகக் கைவிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளமையும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


