Type to search

Headlines Local News News

இலங்கை கிரிக்கெட் தலைவரை பதவிவிலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

Share

இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரன் விக்ரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன.

கிரிக்கெட் தலைவரின் ராஜினாமாவைக் கோரி வீரர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு இணங்க, ஒரு கடுமையான நடவடிக்கையாக, ஷம்மி சில்வாவை  விரைவில் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவருக்குத் தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செல்வாக்கு மற்றும் முறைகேடான அதிகாரப் பலத்தின் மூலம் தலைவர் பதவியில் நீடித்துவந்த ஷம்மி சில்வா, தற்போது தனது பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் நிறைந்த நிர்வாக மாற்றத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) அறிவித்துள்ளதாகவும், இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் அதற்கு ICC அனுமதி வழங்கியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு ஷம்மி சில்வா விவகாரமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னிணியில், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மற்றும் தணிக்கையாளர் நாயகத்தின் பல விசாரணை அறிக்கைகள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றத்தைக் கோரியிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமது தேர்தல் வாக்குறுதிக்கமைய அரச நிறுவனங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இதனைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link