Type to search

Headlines Local News News

தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திரு உருவச்சிலை திறந்து வைப்பு!

Share

நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா  சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திரு உருவச்சிலை நேற்றய தினம் யாழில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டது. 

நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிலையினை கம்பவாருதி ஜெயராஜ் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந் நிகழ்வில் பண்டிதர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், ரிஷி தொண்டு நாதன் சுவாமிகள், நாகவிகாரை விகாரதிபதி, உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் கலந்து கொண்டர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link