Type to search

Editorial

நாடகம் வெற்றி பெறுவதற்கு பொருத்தமான பாத்திரங்கள் தேவை

Share

நாடகம் என்றதும் நாம் நினைப்பது மேடை நாடகத்தையே. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உலகத்தை நாடக மேடையாகவும் மனிதர்களை பாத்திரங்களாகவும் சிவப்பரம்பொ ருளை நாடகத்தின் இயக்குநராகவும் அடையாளப்படுத்துவார்.

அவன் இயக்குகிறான். நாங்கள் நடிக்கின்றோம். அந்தந்தப் பாத்திரங்கள் தாம் தாம் கொண்டு வந்த கன்மவினைப் பயனுக்கு அமைய நடிக்கின்றனர்.

கதை, வசனம் முடிவுக்கு வர, உரிய பாத்திரம் நாடக மேடையை விட்டு வெளியேற வேண்டும்.

இதுதான் நாடகத்தின் நியதி. இஃது உலக நாடகம் பற்றியது.

நாடகம் எதுவாக இருந்தாலும் நடிக்கின்ற பாத்திரங்கள் பொருத்தப்பாடாக இருக்க வேண் டும். அப்போதுதான் நாடகம் சிறப்பாக அமையும்.

எனினும் சில இடங்களில் பொருத்தமில் லாதவர்கள் பொருத்தமில்லாமல் நடிக்கின்ற னர்.

இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

உதாரணத்துக்கு இலங்கையில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துகின்ற நடவடிக் கையில் படைத்தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களுக்குப் பழக்கப்பட்ட நடிபங்கில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத் முற்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஏ-9 வீதியில் ஆனையிறவு சோதனைச் சாவடியிலும் ஏ-32 வீதியில் கேரதீவு – சங்குப்பிட்டி சோதனைச் சாவடியிலும் பயணிகள் பதிவு செய்யப்படுகின்றனர்.

இதனால் அங்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகின்றது.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்போர் இறங்கி நடக்க வேண்டியுள்ளது.

கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கென செய்கின்ற இச்சோதனை நடவடிக்கை கொரோனா தொற்றைப் பரப்பும் அபாயமாக மாறுவதைக் காண முடிகின்றது.

அதேநேரம் இங்கு படைத் தரப்பினர் பணியில் உள்ளனரே தவிர இவ்விடங்களில் சுகா தாரப் பிரிவினரைக் காண முடியவில்லை.

மேலும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனி நபர்களின் அடையாள அட்டைகளைப் பதிவு செய்கின்றவர்கள் குறித்த சோதனைச் சாவடியைத் தாண்டுபவர்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனரா எனக் கருவி கொண்டு சோதிக்கப்படுவதுமில்லை.

இதற்கு மேலாக, புளியங்குளத்துக்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட எல்லைக்குள் குறைந் தது ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு ஒரு சோதனைச் சாவடி என அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது எதற் கென்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

ஆக, சுகாதாரப் பிரிவினர் நடிக்க வேண்டிய இடத்தில் படைத்தரப்பினர் பாத்திரமேற்றால் நாடகம் துன்பம் நிறைந்ததாகவே அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link