நாடு முழுவதும் கொரோனாத் தொற்றினால் உறைந்து போயுள்ளது. கம்பஹாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று வீரியம்மிக்கதென்ற மருத்துவர்களின் எச் சரிக்கையும் அடுத்து வரும் நாட்கள் மிகப் பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு விடுக்கின்ற அபாய அறிவிப்புகளும் மனதைப் பதற வைக்கிறது. கட்டுங்கடங்காமல் கொரோனாத் தொற்றுப் பரவினால், ...
தமிழர்களின் வாழ்வில் தேர் என்பது மிகுந்த முதன்மை கொண்டது. ஆலயத் திருவிழாக்களில் தேரில் இறை வனை ஆரோகணிக்க வைத்து, ஊர் கூடி வடம் இழுத்து மகிழ்வடைகின்ற தேர்த் திரு விழா திருவிழாக்களுக்கெல்லாம் தலை யானது. தவிர, நம் தமிழ் மன்னர்கள் தேரில் பவனி வருவதை மன்னர்க்குரிய மாண்பாகக் கருதி ...
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய நாள் இன்று. பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன் பிருந்து உயிர்த்தியாகம் செய்த அந்த உத்த மனின் நாமம் இறப்பின்றி வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேவேளை உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இயலுமை உண்டென்று எவரும் நினைத்து விடக்கூடாது. மாறாக, புனித ...
தேவலோகக் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் செய்ததாக ஒரு கற்பனை. குழுவில் இந்திரன், பிரம்மா, நந்தி, யமன், சித்திரகுப்தன், நாரதர் ஆகிய ஆறு பேர் அடங்கியிருந்தனர். தேவலோகக் குழுவினர் இலங்கைப் பாராளு மன்றப் பக்கமாக தங்கள் விஜயத்தை ஆரம் பித்தனர். யமன்: சித்திரகுப்தா இதென்ன ஒரே சத்தமும் கூக்குரலுமாக ...
இலங்கை பெளத்த சிங்கள நாடு என உரிமை கொண்டாடப்படுகிறதெனில் அங்கு சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென நம்புவது மடமைத்தனமாகும். பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டை தமக்குரியதென உரிமை கொண்டாடுகின்ற சிறுமைத்தனம் ஆட்சியாளர்களிடம் இருக் கும்போது அங்கு அடிமைத்தனம் இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. இங்கு ...
அரச நிறுவனங்களின் செயலொழுங்கும் மக்களுக்கான அவற்றின் பணிகளும் இன்ன மும் மந்தமும் காலதாமதமும் உடையதாகவே இருந்து வருகிறது. அரச நிறுவனங்களின் நுழைவாயில் களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நோக்கக் கூற்று, பணிக்கூற்று என்பவற்றைப் பார்க்கும் போது மாலை ஆறு மணிக்கு முற்பட்ட ஆட்டோ சாரதி வடிவேலு போல இருக்கும். அந்தளவுக்கு பண்பு, ...
உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்களினதும் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கிலோ உழுந்து ஆயிரம் ரூபாவைக் கடந்து விட்டது. ஒரு தேங்காய் நூறு ரூபாவுக்கு வந்துவிட்டது. தவிர அரிசி, எள்ளு, பயறு என அனைத் துத் தானியங்களினதும் விலைகள் நாளுக்கு நாள் ஏறிய வண்ணமும் இருக்கிறது. ...
வட பகுதியில் உள்ள வயல் நிலங்களைக் கட்டாக்காலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு வேலி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை இந்த நாட்டுக்குப் புதியதாக இருக்கலாம். முன்பெல்லாம் வேலி அடைக் காமல் நெல் விதைத்து அறுவடை செய்த நம் நிலைமை இப்போது இல்லை. யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் கட்டாக்காலி மாடுகளின் ...
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்தமை தெரிந்ததே. நீதிமன் றத்தின் தீர்ப்புகள், உத்தரவுகள் விமர்சனத் துக்குரியவை அல்ல என்ற வகையில் மேற் படி விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்வினதும் பிரதமர் மகிந்த ராஜபக்வின தும் கவனத்துக்குக் கொண்டுவருவதென தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதன் ...
ராஜபக்க்களின் அரசாங்கத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற் றுள்ளனர். எனினும் அவர்கள் அரசாங்கம் செய் கின்ற அத்தனை விடயங்களையும் ஆதரிப்ப வர்களாக இருப்பதனால், அவர்களால் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. குறிப்பாகத் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நில ஆக்கிரமிப்புகள் மற்றும் இராணுவப் பிர ...