தீவகத்தில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலை தீவு, எழுவைதீவு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு கடல் வழிப்பயணம் மட்டுமே உண்டு. அதிலும் குறித்த இடங்களுக்கான கடல் வழிப்பயணம் என்பது ஆழ்கடலாக இருப்பதனால் ஒவ்வொரு பயணத்தின் போதும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதிலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு நாள்தோறும் ...
யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் அவர்கள் நேற்று முன்தினம் புனித பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆயருக்கு எமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று இதுகாறும் யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக இருந்து பெரும்பணியாற்றி ஓய்வு பெறும் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ...
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முதன் முதலில் தகவல் வழங்கியவர் மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ என்பது தெரிந்த உண்மை. யாழ்ப்பாணம் செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டு என அவர் தெரிவித்ததன் காரணமாக அவர் செம்மணிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ...
நம் மண்ணில் நாள்தோறும் நடக்கின்ற விபத்து மரணங்கள் தொடர்பில் இவ்விடத்தில் பல தடவை பிரஸ்தாபித்து விட்டோம். இருந்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கிளிநொச்சியில் நடந்த விபத்தில் உயிரிழந்து போனார். அது தொடர்பில் கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அவ்வளவோடு அந்த விபத்துச் ...
சைவாலய அமைப்பு முறைகளை மத பேதம் கடந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆம், ஆகமப்படி அமையப்பெற்ற ஒரு சைவாலயத்தை நாம் அவதானித்தால், அங்கு மூல மூர்த்தியும் பரிவார மூர்த்திகளும் பிரதிர்டை செய்யப்பட்டிருக்கும். தவிர, ஆலய பூஜையில் ஒழுங்கு முறைமை கட்டாயமாகப் பின்பற்றப்படும். அதாவது குறித்த ஆலயம் சிவன் ...
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதற்கான சாத்தியம் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு சர்வதேச மைதானம் மண்டைதீவில் அமைவதை ஐயம் தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். என்ன செய்ய முடியும். தீவகத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையப் பெற்றாலாவது, தீவகத்தில் ...
முப்பத்து முக்கோடி தேவர்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் விரும்பினான். அஃது நடப்பதாக இருந்தால், நவக்கிரகங்களும் எங்கெங்கு இருக்க வேண்டும் என வேத சாஸ்திர விற்பன்னர்களுடன் கலந்துரையாடினான். எனினும் அவனுக்கு சரியான ஆலோசனை கிடைக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் இராவணன் நாரதமுனியைச் சந்திக்கின்றான். தன் ...
செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ள தென்ற தகவலை முதலில் தெரிவித்தவர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ. மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப் புதைகுழி விடயம் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்திருந்தார். செம்மணியில் மனிதப் ...
2025 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன. பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பகுப்பாய்வுகள் பல வழிகளாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப் பெறுபேற்றின் பகுப்பாய்வுகளின் படி, வடக்கு மாகாணம் கடைசிக்கு முதல் இடத்தில் இருப்பதை அறியமுடிகிறது. ஒரு காலத்தில் கல்வி என்றால் அது யாழ்ப்பாணம் என்ற ...
நம் தமிழ்ப் பழமொழிகள் பொருள் செறிந்தவை மட்டுமல்ல. அவை நடைமுறை வாழ்வியலின் நிதர்சனமான உண்மைகள். எனவே பழமொழிகளை நாம் யாரும் கடந்து சென்று விடக்கூடாது. அவ்வாறு கடந்து செல்ல நினைத்தாலும் பரவாயில்லை. எங்கள் மனமாவது பரந்து விரிந்து சிந்திக்கத்தக்கதாக இருக்க வேண்டும். இதுவும் இல்லை. பழமொழிகள் பற்றிய நினைப்பும் ...