நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளமை கண்டு தமிழ் மக்கள் திருப்தியடைந்துள்ளனர். வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் நீதிமன்றில் அறிவித்தமை காலம் உணர்ந்து அவர் செய்த கைங்கரியம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும். எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், ...
இறைவன் உனக்குத் தர நினைத்ததை எந்த மனிதனாலும் தடுத்து விட முடியாது. இறைவன் உனக்குத் தர நினைக்காததை எந்த மனிதனாலும் தந்துவிட முடியாது. இந்தத் தத்துவத்தின்பால் நாம் கவனம் செலுத்துவோம். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது 79ஆவது வயதில் புதிய கட்சியை ஆரம்பித்து 80ஆவது வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார். ...
எதிர்வரும் 26ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு தினம். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இவை ஒருபுறமிருக்க, இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் தத்தம் சமயத்தை பரப்புவதை மிக வேகமாகச் செய்தனர். கூடவே வரலாற்றுச் ...
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று உலகத்துக்கு உரக்கக் கூறிய இனம் நம் தமிழினம். அதனாலன்றோ வேளாண் செய் விவசாயிகள் சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து நன்றி கூறுகின்ற மிக உயர்ந்த பண் பாட்டை தங்களின் உடைமையாக்கிக் கொண்டனர். எனினும் இன்றைய சமகாலத்தில் விவசாயம் என்பது எங்களிடம் இருந்து எட்டியுள்ளது. ...
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஓரறிவு கொண்ட மரங்கள் என இவையனைத்துக்கும் பலமும் பலவீனமும் இருக்கவே செய்கிறது. இஃது இறைவனின் படைப்பு. அந்தவகையில் சிங்கத்தின் பலம் அதன் பிடரியில் உள்ளது. யானைக்குத் துதிக்கை பலம், மானுக்கு கொம்பு, கழுகுக்கு அலகு, பாம்புக்குப் பல்லு இவ்வாறு ஒவ்வொன்றுக் கும் ஒவ்வொரு ...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியை துரைராஜசிங்கம் இராஜினாமாச் செய்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததன் பிற்பாடு, அந்தக் கட்சிக்குள் அக முரண்பாடுகள் வலுத்துக் கொண்டன. இந்த அக முரண்பாட்டை ஏற்படுத்தியதில் துரைராஜசிங்கத்துக்குப் பெரும் பங்குண்டு. ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ...
நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன் என்றார் கீதோபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மா. அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காகக் கண்ண பரமாத்மா எடுக்கின்ற அவதாரம் பத்து என்றாயிற்று. எனினும் அதர்மம் வலிமை பெற்றிருக் கிறதேயன்றி தர்மம் மேலோங்கியதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக, இலங்கையைப் பொறுத்த ...
சிவனருட்செல்வர் என்ற நூலைத் தந்தவர் திருமுருக கிருபானந்தவாரியார். சமயச் சொற்பொழிவினால் உலகைக் கவர்ந்தவர் வாரியார். அவர் ஆன் கன்றும் கோன் கன்றும் என சொற்பொழிவாற்றினார். ஆன் கன்று என்பது பசுவின் கன்றைக் குறிக்கும். கோன் கன்று என்பது மன்னன் மகனை விளிக்கும். ஆக, மனுநீதி கண்ட சோழ மன்னனின் ...
காலம் என்ற தமிழ்ச் சொல் மிகப் பெறுமதியானது மட்டுமன்றி, அனைத்துத் தமிழ் மக் களாலும் உச்சரிக்கப்படுகின்ற ஆற்றுகைச் சொல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர, காலம் என்பது பலபொருள் தரக் கூடிய ஒரு சொல் என்பதும் இங்கு கவனிக் கப்பட வேண்டியது. அந்த வகையில், எமது வாழ்க்கையின் ஏற்ற ...
கொரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் விவசாய முயற்சிகள் மும்முரம் பெற்றுள்ளன என்பதைக் கூறித்தானாக வேண்டும். கொரோனாத் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுலாகிய போது வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் வீட்டுத் தோட்டத்தின் மீது கருசனை செலுத்தினர். வீட்டுத் தோட்ட முயற்சிகள் வெற்றியளித்ததுடன் உளரீதியான உற்சாகத்தையும் ஏற் படுத்தியது. ...