தேர்தலில் வாக்களித்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாகத் தமிழ் மக்கள் நினைக்கின்றனர். இதனாலேயே தமிழ் அரசியல்வாதிகளில் பலர் தமது பணிகளை மறந்து செயற்படு கின்றனர். இதுதவிர, சில தமிழ் அரசியல் கட்சிகளி டையே நிலவுகின்ற உள்ளக முரண்பாடு களைப் பார்ககும்போது இஃதென்ன அநியாயம். தேர்தல் முடிந்த கையோடு இப்படியயல் ...
சைவாலங்களில் நடைபெறுகின்ற மகோற்சவம் என்பது நித்தியபூசைகளில் ஏற்படக் கூடிய தவறுகளை நிவர்த்தி செய்வதற்கானதாகும். எனவே மகோற்சவத்தில் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது சிவாச்சாரியர்களின் கடமை. தவிர, திருவிழாக்கள் என்பது இறைவனின் ஐந்தொழிலைக் குறிப்பதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலை அடிப் படையாகக் கொண்டு திருவிழாக்கள் ...
இதிகாச காப்பியமான மகாபாரதத்தை அனைவரும் கற்றறிய வேண்டும். இராமா யணத்தைக் கடந்து, மகாபாரதம் போதிக்கின்ற தத்துவங்கள் மனித வாழ்வுக்குத் தேவையானவை. இராமாயணத்தில் அவதார புருசனாகிய இராமர் துன்பப்படுகின்றார். மகாபாரதத்தில் அவதார மூர்த்தியான கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை நிலைநாட்டு வதற்காகச் செயலாற்றி நிற்கிறார். அவதாரமாயினும் பூமியின்கண் வந்துற்றால் கன்மவினைப்பயன் பற்றிக் ...
அரசியல் நீரோட்டத்தில் நடந்த ஆட்சி மாற்றம் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத் தப் போகின்றது. அதிலும் குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாதொழிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தியாயிற்று. இதில் வேடிக்கை என்னவெனில், 19 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ...
நாடளாவிய ரீதியில் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது வடக்கு மாகாணம் பின்தங்கியுள்ள நிலையில் இருப்பதான புள்ளிவிபரத் தகவல்கள் பலருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்து மாணவர்களைப்போல் படிக்க வேண்டும் என்று சிங்கள – முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதான செய்திகளைக் கேட்ட ஓர் இனம், இன்று ...
இது எனது கட்சி. என் தந்தை, அவர் தந்தை எனத் தொன்று தொட்டு இந்தக் கட்சியே எங்களுடையது என்ற அரசியல் கட்சிப் பண்பாடு இனிப் பொருத்தமில்லை என்பதை ஏற் றுத்தானாக வேண்டும். ஒரு காலத்தில் தொகுதி வாரியாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது கட்சி ஆதரவு என்பது ...
ஒருமுறை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார் கள். அப்போது அமைச்சராக இருந்த சிறில் மத்யூ, பாணந்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நெவில் பெர்ணான்டோ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை கண்டபாட்டில் திட்டினர். காலிமுகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைக் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையில்; இந்த நாட்டின் மூத்த குடிகளின் தாய்மொழி தமிழ் என்ற உண்மையைக் கூறியதால் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெகுண்டெழுந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இந்தச் சின்னத் தனமானவர்களை என்ன செய்வது என்றே எண்ணத் தோன்றும் அதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ...
ஞானம் என்பது திருவருளாலும் காலத்தின் நீட்சியாலும் கிடைக்கப் பெறுவது. கருவில் திருவுடையவரை ஞானம் தேடி வரும். அஞ்ஞான இருளில் மூழ்கியிருப்போர்க்கு காலத்தின் அசைவு ஞானத்தைப் போதிக்கும். இங்கு முன்னையது தெய்வீகமானது. பின்னையது அனுபவித்து அடைவது. இதை நாம் கூறும்போது, இதற்கு உதாரணம் கூறுங்கள் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம். ...
பழக்கதோசம் என்பது சந்தர்ப்பத்தில் வந்தே ஆகும் என்பதற்குப் பின்வரும் கதை பொருத்துடையது. ஒருவர் எதற்கெடுத்தாலும் தான் கட்டியிருக்கும் சாரத்தை மடித்து சண்டியன் கட்டுக் கட் டிக் கொள்வார். அந்த நபரை நாடகம் ஒன்றில் நடிக்க வைத்தார்கள். நாடகம் கோவலன் – கண்ணகி. கண்ணகி பாத்திரம் அந்த நபருக்கு வழங்கப்பட்டது. ...