Type to search

Headlines Local News News

புத்தாண்டில் பதிவான பட்டாசு விபத்து தொடர்பில் சுகாதாரத்துறை தகவல்

Share

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகளவான, வீதி விபத்துகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் பதிவாகும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு வருடம் முழுவதும் வாராந்தம் சுமார் 25 ஆயிரம் பேர் பல்வேறு விபத்துகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இந்த ஆண்டு புத்தாண்டுக்கு முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது சாதாரண வாரங்களை விட 14 சதவீத அதிகரிப்பு என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link