Type to search

Headlines News World News

ஈரானுடனான போர் முடியும் தருவாயில்! – ட்ரம்ப் நம்பிக்கை

Share

ஈரானுடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தற்போது பின்வாங்கினாலும் ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 20 ஆண்டுகள் ஆகும் என்றும், ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். ‘வேலை இன்னும் முடியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க மற்றும் ஈரானிய உயர்மட்டக் குழுவினர் மீண்டும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைக்கும் காலப்பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் இந்த வாரம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link