Type to search

Articles Uncategorized விகடன் பிளஸ்

விஜய் விசில் புரட்சி…

Share

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது.

அரை நூற்றாண்டுக்கால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த்

தெறிந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத் திருக்கிறது.

பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட

முடியாத வெற்றியைச் சாத்தியப் படுத்தியிருக்கிறார் த.வெ.க தலைவர் விஜய்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றியடைந்திருக்கும் த.வெ.க, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

களமிறங்கிய முதல் தேர்தலி லேயே, 1.5 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது அந்தக் கட்சி.

அதேசமயம், தங்களுடைய தொகுதிகளிலும், தமிழக அளவிலும் பரிச்சயமான அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினே தோற்றது யாருமே எதிர்பாராத ‘ஷாக்’! அந்த அளவுக்கு,

தமிழகத்தையே சுழற்றியடித்து விட்டது விஜய் சுனாமி.

சாதி, மதங்களைக் கடந்த விஜய்!

த.வெ.கவின் இந்த இமாலய வெற்றிக்கு, விஜய்யின் முகமே பிரதானம். முன்பின் அறிமுகமில்லாத வேட்பாளர்கள், கட்டமைப்பு இல்லாத கட்சி, தொய்வான பிரசாரம் என்று பல நூறு விமர்சனங்களைப் புறந்தள்ளி, தன்னுடைய முகத்தை மட்டுமே பிரசாரத்தில் முன்னிறுத்தி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் விஜய்.

மதுரையில் நடந்த மாநாட்டில் பேசும்போது, “திருப் பரங்குன்றத்தில் விஜய், திருமங்க லத்தில் விஜய், மதுரை மத்தியில் விஜய் என ஒவ்வொரு தொகுதியிலும் இந்த விஜய்தான் நிற்கிறேன். அதை மனதில் வைத்து வாக்களியுங்கள்…” என்று கேட்டுக்

கொண்டார் விஜய்.

அவர் பேச்சு மக்களிடம் எடுபட்டிருப்பதைத் தான் தேர்தல் முடிவுகளும் பிரதி பலிக்கின்றன.

அதேபோல, சாதி மதங்களைக் கடந்தும் த.வெ.க வுக்கு வாக்குகள் கிடைத்திருப்பது பெரிய ஆச்சரியம்.

சாதித்த ஜான் ஆரோக்கியசாமி!

இந்தத் தேர்தலின் ஸ்டார் விஜய் மட்டுமல்ல, அவருடைய வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியும்தான். தேர்தல் நெருங்க நெருங்க, த.வெ.கவில் இருந்த பலருமே வெற்றியைச் சந்தேகித்தபோது, ‘நாம் வெற்றி பெறுவோம். த.வெ.கதான் ஆட்சி யமைக்கும்’ என்று அடித்துச் சொன்னார் ஜான் ஆரோக்கிய சாமி.

கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட பல கூட்டங்களிலும், ‘இந்தத் தேர்தலை யாராலும் கணிக்கவே முடியாது.

தமிழகமெங்கும் விஜய் அலை சுனாமியாக புரட்டிப்போடப் போகி

றது. மக்களெல்லாம் த.வெ.கவுக்கு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள்’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

‘தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார்’, ‘வீட்டில் இருக்கும் குழந்தைகளெல்லாம் அவரவர் பெற்றோர், தாத்தா, பாட்டிகளிடம் விஜய்க்கு வாக்குக் கேட்டு பிரசாரம் செய்கிறார்கள்’ என்பதைச் சரியாக கணித்த வரும் ஜான் ஆரோக்கியசாமிதான்.

தி.மு.கவைத் தகர்த்த ஆதவ் அர்ஜூனா!

ஜான் ஆரோக்கியசாமி சொன்னதுபோல, வேட்பாளர் பெயரே தெரியவில்லை என்றாலும்கூட, ஒவ்வொரு தொகுதியிலும் த.வெ.க வுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள்.

ஜான் அளவுக்கு, த.வெ.கவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் அந்தக் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா.

தலைவர் விஜய்யின் பிரசாரத்தை வடிவமைத்தவரும் ஆதவ் தான். அதேபோல, கட்சியின் சட்டப் போராட்டங்களை நடத்தியவரும் அவர்தான்.

கட்சியின் மாநாட்டுச் செலவுகள், தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், நிர்வாகிகள் கூட்டங்கள் என்று கடந்த இரண்டு வருடங்களில் பெரும் பொருட் செலவைச் செய்திருக்கிறார் ஆதவ்.

‘வாய்ஸ் ஆஃப் காமன்’ என்கிற தன்னுடைய நிறுவனத்தில் சுமார் 400 பணியாளர் களை நியமித்து, த.வெ.கவின் தேர்தல் வேலைகளைப் பார்த்தார்.

இப்படி, கடந்த இரண்டு வருடங்களாக ஆதவ் கொடுத்த உழைப்பு, கட்

சியை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது” என்கிறார்கள்.

வேட்பாளர் தேர்வு தொடர்பான விவாதம் நடந்தபோது, தகுதியான வேட்பாளர்களை மட்டுமே நிறுத்த வேண்டுமென முடிவெடுத்த த.வெ.க தலைமை, அதற்கான பணிகளை ‘திங்க் பாலிடிக்ஸ்’ நிறுவனத்தின் பிரவீன், ஜெயந்தனிடம் ஒப்படைத்தது, அவர்கள்தான்.

எம்.ஜி.ஆரை விஞ்சிய விஜய்… அடுத்தது என்ன?

1977 சட்டமன்றத் தேர்தலின் போது, சி.பி.எம், ஃபார்வர்டு பிளாக் கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டுதான் தேர்தலைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர்.

கட்சி தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தலைச் சந்தித்தவருக்கு, நீண்ட அரசியல் அனுபவம் இருந்தது.

அவரோடு, அரங்கநாயகம், பொன்னையன், முசிறி புத்தன், பண்ருட்டி ராமச்சந்திரன், முத்துசாமி, செங்கோட்டையன் என்று அரசியல் அனுபவம் கொண்ட பலரும் உடனிருந் தார்கள்.

இவ்வளவு இருந்தும்கூட, அந்தத் தேர்தலில் 30.4 சதவிகித வாக்குகளே பெற்றார் எம்.ஜி.ஆர். அவர் தலைமையிலான கூட்டணி, 33.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இதில் ஒன்றுகூட விஜய்க்கு இல்லை.

விஜய்க்கு எனக் கட்சிக் கட்டமைப்புக்கூட இல்லை. செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் போன்ற ஒரு சிலரைத் தவிர அனுபவம் வாய்ந்த தலைவர்கள் உடனில்லை. பண பலம் இல்லை.

அப்படியிருந் தும்கூட, தனித்துப் போட்டியிட்டு 34.9 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார் விஜய். இந்தத் தேர்தல் மூலமாக, எம்.ஜி.ஆரையே

விஞ்சிவிட்டார் விஜய்.

அவருக்கு எதிராக, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் சுமார் 15,000 கோடி ரூபாயைக் கொட்டி இறைத்திருக்கின்றன.

பணம் கொடுத்தாலும் ஓட்டு விழாது என்பதும், மக்கள் செல்வாக்கு இருந்தால் பணமில்லாமலேயே வெற்றி பெறலாம் என்பதும் இந்தத் தேர்தல் மூலமாக நிரூபணம் ஆகியிருக்கிறது. உண்மையிலேயே, இது பெரும் புரட்சிதான்” என்றனர்.

அவர்கள் சொல்வதுபோல இது பெரும் புரட்சிதான். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், மக்களை மட்டுமே நம்பிக் களத்தில் நின்று, மக்கள் மனங்களை வென்று

காட்டியிருக்கிறார் விஜய். இளைஞர்களோடு பெண்கள் அபரிமிதமாக வாக்களித்திருப்பதே அவரது வெற்றிக்குக் காரணம்.

இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று தேடிக் கொண்டிருந்த தமிழக மக்கள், விஜய்யை மாற்று சக்தியாக அங்கீகரித்திருக்கிறார்கள். பணம் செலவு செய்யாமல் தேர்தலைச் சந்தித்த அவருக்குப் பெருவாரியான வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் சொன்னதுபோல, இரு கட்சிகளிடமும் பணமும் பரிசுப் பொருளும் வாங்கிக்

கொண்டு, அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்பியிருக்கிறார்கள்.

பணம் கொடுத்தாலும் மக்களின் மனதை வென்றுவிட முடியாது என்பது அப்பட்டமாகியிருக்கிறது.

ஜனநாயகத்துக்கு, இது ஓர் ஆரோக்கியமான தொடக்கம்தான்.

அதேசமயம், விஜய்க்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. அப்பழுக் கற்ற ஆட்சி நிர்வாகத்தை அவர் தருவார் என்கின்ற மக்களின் நம்பிக்கையை, விஜய் காப்பாற்றுவார் என நம்புவோம். உண்மையிலேயே இது விசில் புரட்சிதான்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link